/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெயிலுக்கு இதமாகும் வெட்டிவேர் குடிநீர்; மண் பானைகளில் மக்களுக்கு வழங்கல்

ADDED : ஏப் 02, 2025 07:49 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மூலிகை குணங்களுடன், உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும், வெட்டி வேர் கலந்த குடிநீர் மண் பானையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பல்வேறு இடங்களில், உடுமலை மக்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
அதோடு, வெட்டி வேர் கலந்த குடிநீர் பருகினால், தாகம் தணிந்து, உடலை குளிர்ச்சியடைய செய்யும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
வெப்பதால் ஏற்படும் காய்ச்சல், உடல் சூடு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், வெட்டி வேர் கலந்த நீர் குடித்து வந்தால், பாதிப்புகள் குறையும். நீர் எரிச்சல், தோல் நோய் பாதிப்புகள் குறையும் என விழிப்புணர்வு வாசகங்களும் அங்கு இடம் பெற்றுள்ளன.
இது குறித்து, மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த மூர்த்தி கூறுகையில், ''வெயிலின் தாக்கத்திற்கு தீர்வாக, இயற்கையான உணவு பழக்கம் பாரம்பரியமாக உள்ளது. மண் பானைகளில் குடிநீர், தர்ப்பூசணி, வெட்டிவேர், நன்னாரி என பல்வேறு முறைகளை முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்தனர். எளிதாக கிடைக்கும் இது போன்ற இயற்கையான குளிர்பானங்களை மக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும்,'' என்றார்.