/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீருக்கான கிராமசபா கூட்டத்தில் விவாத பொருளாக மாறிய குடிநீர் பிரச்னை
/
தண்ணீருக்கான கிராமசபா கூட்டத்தில் விவாத பொருளாக மாறிய குடிநீர் பிரச்னை
தண்ணீருக்கான கிராமசபா கூட்டத்தில் விவாத பொருளாக மாறிய குடிநீர் பிரச்னை
தண்ணீருக்கான கிராமசபா கூட்டத்தில் விவாத பொருளாக மாறிய குடிநீர் பிரச்னை
ADDED : மார் 29, 2025 11:55 PM

பல்லடம்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபா கூட்டம் நேற்று ஊராட்சிகள் தோறும் நடந்தது. பல்லடத்தை அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
பாலசுப்பிரமணியம் (முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்): ஜல் ஜீவன் திட்டத்தில் விடுபட்ட மக்களும் பயன்பெறும் வகையில், மக்கள் தொகைக்கு ஏற்ப குழாயை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும்.
நடராஜன் (முன்னாள் எம்.எல்.ஏ.,): மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டத்தில் புதிதாக குடிநீர் குழாய்களை இணைத்ததன் மூலம், ஏற்கனவே குடிநீர் பெற்று வருபவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிதாக இணைப்பு தருவதானால், கூடுதலாக குடிநீரை பெற்று, பிரத்யகமாக குழாய் அமைப்பது கொண்டு செல்ல வேண்டும். ஊராட்சியில், குடிநீருக்காக அதிக பட்ஜெட் ஒதுக்குங்கள். மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது தொட்டிகளை சுத்தம் செய்யுங்கள். பாம்பெல்லாம் வருவதாக கூறுகின்றனர். கடந்த காலத்தில் பெற்று வந்த எல் அண்ட் டி குடிநீர் ஊராட்சி மூலம் வேண்டாம் என்று கூறப்பட்டதால், இன்று குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை எப்படியாவது மீண்டும் கிடைக்க செய்ய வேண்டும்.
முருகதாஸ் (காங்., இலக்கிய அணி மாநில பொதுச் செயலாளர்): குடிநீர் கட்டணம், மின் கட்டணம் என, ஏராளமான கட்டணங்கள் ஊராட்சி மூலம் செலுத்தப்படாமல் உள்ளன. முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டித்து, பொதுமக்களுக்கு குடிநீர் கட்டுப்பாடு இன்று கிடைக்க செய்ய வேண்டும்.
தொடர்ந்து பேசிய பொதுமக்கள், எல் அண்ட் டி குடிநீர் வேண்டாம் என்று
ஊராட்சி எடுத்த நடவடிக்கைக்கு வார்டு உறுப்பினர்களும்தான் பொறுப்பு. நாய்களும் கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றன. நாய் வளர்ப்பவர்கள் அவற்றுக்கு தண்ணீர் கூட வைப்பதில்லை' என, குடிநீரை பிரதானமாகக் கொண்டு ஊராட்சியில் பல்வேறு விவாதங்கள் நடந்தன.
---
கரைப்புதுாரில் நேற்று நடந்த கிராமசபா கூட்டத்திற்கு சொற்ப அளவிலான அளவிலான பொதுமக்களே வந்திருந்தனர்.