தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பத்து நாளுக்கு ஒருமுறை பத்துமா குடிநீர்?

பத்து நாளுக்கு ஒருமுறை பத்துமா குடிநீர்?

பத்து நாளுக்கு ஒருமுறை பத்துமா குடிநீர்?


UPDATED : ஜூலை 05, 2026 05:56 PM

ADDED : ஜூலை 05, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2026 05:56 PM ADDED : ஜூலை 05, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்கள் தவிப்பு

நொச்சிபாளையம், திருவள்ளுவர்நகர், வாய்க்கால்மேடு பகுதிகளுக்கு, பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

- சுருதி, நொச்சிபாளையம்.

இருள்மய வீதி

பல்லடம் ரோடு, டி.கே.டி. மில், முல்லை நகர் முதல் வீதியில் இரண்டு மாதமாகத் தெருவிளக்கு எரிவதில்லை.

- கனகு, பல்லடம் ரோடு.

ஆண்டிபாளையம், ஜான்ஜோதி கார்டன் பகுதியில், 15 நாட்களாகத் தெருவிளக்கு எரிவதில்லை. கும்மிருட்டாக உள்ளது.

- சதீஸ், ஜான்ஜோதி கார்டன். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகே பாதாள சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. பாதசாரிகள் நடக்க வழியில்லை.

- சங்கர்சதீஷ், பாண்டியன் நகர். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

செங்குந்தபுரம் ஆறாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது.

- கவிப்பிரியா, செங்குந்தபுரம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், இ.பி. காலனியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அருகே உள்ள குழாய் கேட்வால்வை மாற்ற வேண்டும். தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

- ஹரிஷ்கண்ணன், இ.பி. காலனி. (படம் உண்டு)

குப்பை தேக்கம்

சந்திராபுரம் ரோட்டோரத்தில் நிறைந்துள்ள குப்பைகளை அள்ள வேண்டும். தேங்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ரமேஷ், சந்திராபுரம்.

சுகாதாரச் சீர்கேடு

அனுப்பர்பாளையம், மாரியம்மன் கோவில் வீதி துவக்கப்பள்ளி சந்திப்பு வீதியில் ஒரு மாதமாக அள்ளாமல் குப்பை அப்படியே குவிந்து கிடக்கிறது; சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- கனகராஜ், அனுப்பர்பாளையம்

சாலைப்பணி முடியுமா?

அவிநாசி மடத்துப்பாளையம் - மகா நகர் இடையே ரோடு போட ஜல்லி கொட்டி அப்படியே விடப்பட்டுள்ளது. சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

- முருகேசன், மடத்துப்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us