UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 4-வது குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் அமித் நேற்று ஆய்வு செய்தார். 24 மணி நேர குடிநீர் வழங்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட வார்டுகளில் குழாய் பதிப்பு, நீர் சோதனை மற்றும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 18, 46-வது வார்டுகளுக்குட்பட்ட டி.எஸ்.ஆர். லேஅவுட், காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் நடைபெறும் பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்கவும், குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் குழிகளை மூடி சாலைகளை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
