/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தட்டுப்பாடு வெயில் காலத்தில் தவியாய் தவிக்கும் பொதுமக்கள்
/
மத்திய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தட்டுப்பாடு வெயில் காலத்தில் தவியாய் தவிக்கும் பொதுமக்கள்
மத்திய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தட்டுப்பாடு வெயில் காலத்தில் தவியாய் தவிக்கும் பொதுமக்கள்
மத்திய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தட்டுப்பாடு வெயில் காலத்தில் தவியாய் தவிக்கும் பொதுமக்கள்
ADDED : மார் 16, 2025 12:09 AM

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. மாநகராட்சி தொட் டியில் நிரப்பும் தண்ணீர் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை.
திருப்பூர் நகரின் மத்திய பகுதியில் காமராஜர் ரோட்டில், மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. நகரின் மூன்று இடங்களில் பஸ் ஸ்டாண்ட் உள்ள போதும், அதிகளவு பஸ்களும், பயணிகளும் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டாக மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
இதனால், பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதி, பஸ்கள் நுழையுமிடம் மற்றும் பஸ்கள் வெளியே செல்லும் இடம், டிரைவர், நடத்துனர் கையொப்பமிடும் மையம் ஆகிய நான்கு இடங்களில், நான்கு பிளாஸ்டிக் தண் ணீர் டேங்க் மாநகராட்சியால் நிறுவப்பட்டுள்ளது. இதில், லாரிகள் வாயிலாக குடிநீர் நிரப்பப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இரண்டு ஆர்.ஓ.,க் கள் நிறுவப்பட்டுள்ளது.
கோடை துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் திருப்பூரில் அதிகரித்துள்ளது. தாகம் தாங்காமல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மதிய வேளைகளில் குடிநீரை தேடி அலைகின்றனர். ஆனால், போதிய அளவில் குடிநீர் இல்லை.
பிளாஸ்டிக் டேங்க்குகள் காலியாக உள்ளது. கடைகளில், 20 - 25 ரூபாய்க்கு விற்கும் குடிநீர் பாட்டில்களை வாங்கி, அப்போதைக்கு தாகம் தணிக்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூறியதாவது:
நான்கு தண்ணீர் டேங்குகளில் ஒன்று உடைந்து விட்டது. மற்ற இரண்டில் தண்ணீர் நிரப்புவதில்லை. நடத்துனர் கையெழுத்து போடுமிடத்தில் உள்ள டேங்கில் மட்டும் குடிநீர் நிரப்புகின்றனர்.
ஒரு டேங்கில் நிரப்பும் ஆயிரம் லிட்டர் குடிநீர், நாள் முழுவதும் பயணிகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை. மதியத்துக்கு முன்பாகவே தீர்ந்து விடுகிறது.
ஒரு ஆர்.ஓ., டேங்க் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆர்.ஓ.,வில் காலையில் மட்டும் தண்ணீர் வருகிறது; மதியம் தண்ணீர் வருவதில்லை. மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கா னோர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். ஆனால், அவ்வளவு பேருக்கான குடிநீர் வசதி பஸ் ஸ்டாண்டில் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்டதற்கு, ''பயணிகளுக்கு போதியளவு தண்ணீர் டேங்குகளில் தினசரி நிரப்பப்படுகிறது.
தண்ணீர் இல்லையென்று, புகார் தெரிவித்தால், உடனடியாக லாரியை அனுப்பி நிரப்பிக் கொண்டுதான் இருக்கிறோம்,' என, பதிலளித்தார்.
ஆனால், பயணிகளோ, 'செயல்பாட்டில் உள்ள ஒரு டேங்கில் முழுமையாக தண்ணீர் நிரப்புவதில்லை. எத்தனை பயணிகள் வந்து செல்கிறார்கள் என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கே முழுமையாக தெரியும்.
அதற்கேற்ப விரிவான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். இருக்கும் மூன்று டேங்கில் முழுமையாக இருவேளையும் குடிநீர் நிரப்ப மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்கின்றனர்.