/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம் ;கைகொடுக்கும் சொட்டு நீர் பாசனம்
/
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம் ;கைகொடுக்கும் சொட்டு நீர் பாசனம்
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம் ;கைகொடுக்கும் சொட்டு நீர் பாசனம்
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம் ;கைகொடுக்கும் சொட்டு நீர் பாசனம்
ADDED : பிப் 22, 2024 09:10 PM
உடுமலை;நீர் தேவை குறைவாக உள்ள, செடி முருங்கை சாகுபடியில் ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் காய்கறி சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில், தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரி என, பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதோடு, உடுமலை, தாராபுரம், மூலனுார் உட்பட வறட்சியான பகுதிகளில், செடி முருங்கை சாகுபடியும் நடந்து வருகிறது.
வறட்சியை தாங்கி வளர்ந்து, அதிக பலன் தரும், முருங்கை ரகங்களை தேர்வு செய்து அப்பகுதி விவசாயிகள், இச்சாகுபடியில், நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், இச்சாகுபடி பரப்பு குறைவாக உள்ளது.
தற்போது, நிலையான வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, செடி முருங்கை சாகுபடியை விவசாயிகள் அதிகளவு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், உடுமலை பகுதிகளில் முருங்கை சாகுபடி வளர்ச்சியடைந்து வரும் விவசாயமாக உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'அனைத்து வகை மண்ணிலும் செடி முருங்கை வளரும். அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை; பயிரிட்ட ஆறு மாதத்தில் காய்க்க தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்கிறோம். உள்ளூர் சந்தைகளிலேயே காய்களை சந்தைப்படுத்தி வருகிறோம்,' என்றனர்.