தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சொட்டு நீர்ப்பாசனம் பராமரித்தல் அவசியம்

சொட்டு நீர்ப்பாசனம் பராமரித்தல் அவசியம்

சொட்டு நீர்ப்பாசனம் பராமரித்தல் அவசியம்


ADDED : அக் 23, 2024 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள சொட்டு நீர் பாசன கட்டமைப்புகளை, முறையாக பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்திற்கு நீர் ஆதாரங்கள் குறைத்து வரும் சூழலில், பயிர் சாகுபடிக்கு சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நுண்ணீர்ப்பாசன கட்டமைப்பு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

இம்முறையில், பயிருக்குத் தேவையான சரியான அளவு நீரை நேரடியாக பயிரின் வேர்ப்பகுதியில் அளிப்பதோடு, பாசன நீர் சேமிப்பு, உரச்செலவு குறைவு என பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

ஆனால், சொட்டு நீர் பாசன கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரிப்பதும் அவசியமானதாகும்.

தினமும், சல்லடை தட்டு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்வதோடு, நீரை ஓட விட்டு வடிகட்டியின் அடியிலுள்ள வால்வைத் திறந்து நீரை வெளியேற்றிவிட்டால், சல்லடை, தட்டினைச் சுற்றியுள்ள துாசிகளை வெளியேற்ற முடியும். மணல் வடிகட்டியில் நீரைப் பின் நோக்கி ஓடவிட்டு மணல் வடிகட்டப்பட்ட தூசிகளை அகற்றவேண்டும்.

அனைத்து கேட்வால்வுகளும் திறந்திருக்கின்றனவா, மூடியிருக்கின்றதா என சோதனை செய்த பின், நீர்ப்பாய்ச்ச வேண்டிய கிளைக் குழாய் வால்வினை மட்டும் திறந்து வைக்கவேண்டும்.

வாரந்தோறும், வயல் முழுவதும் உள்ள உமிழிகளை, சொட்டிகளை சோதனையிட்டு, கசிவு இருக்கின்ற உமிழிகள் இணைப்புக்கள், அடைப்பட்ட உமிழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து சரி செய்யவேண்டும்.

பயிருக்கான உர அட்டவணைப்படி கரையும் உரம் செலுத்தப்படுவதையும், பயிரின் பருவத்திற்கேற்ப வினியோகிக்க, அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என கவனித்து சரி செய்யவேண்டும்.

இவ்வாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us