/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்குவாரியில் 'டிரோன்' சர்வே; அதிகாரிகள் குழு மும்முரம்
/
கல்குவாரியில் 'டிரோன்' சர்வே; அதிகாரிகள் குழு மும்முரம்
கல்குவாரியில் 'டிரோன்' சர்வே; அதிகாரிகள் குழு மும்முரம்
கல்குவாரியில் 'டிரோன்' சர்வே; அதிகாரிகள் குழு மும்முரம்
ADDED : மார் 27, 2025 12:32 AM
பல்லடம்; கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில், அதிகாரிகள், 'டிரோன்' வாயிலாக, ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரி ஒன்று, சட்ட விரோதமாக இயங்கி வருவதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் முகவரி உட்பட, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பல்லடம் தாசில்தார் சபரிகிரி மற்றும் குழுவினர், கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, 'டிரோன்' உதவியுடன் ஆய்வு நடந்தது. கல்குவாரியின் நீள அகலம், ஆழம் உள்ளிட்டவை அளவீடு செய்யப்பட்டன.
நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே கல்குவாரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடந்தது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சில அரசு துறை அதிகாரிகள் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு உண்மையை மறைத்து போலி ஆவணம் தயார் செய்யவும், தவறான விவரங்களை கொடுத்து மீண்டும் மீண்டும் கற்கள் வெட்டி எடுக்க உரிமம் வழங்கவும் உதவுகின்றனர்.
சுற்றுச்சூழலை அளித்து, விவசாயிகள், மக்கள் வாழ்வதை கெடுத்து, கல்குவாரி என்ற பெயரில் பாலைவனமாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும்,'' என்றார்.