sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஜொள்ளுங்க... மேடம்!'

/

'ஜொள்ளுங்க... மேடம்!'

'ஜொள்ளுங்க... மேடம்!'

'ஜொள்ளுங்க... மேடம்!'


ADDED : மார் 18, 2025 04:00 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''என்னக்கா இப்படி... நம்ம ஏரியாவில அடிக்கடி கொலை, கொள்ளைன்னு நடக்குது,'' என சித்ரா வீட்டுக்குள் வந்ததும் சலித்துக் கொண்டாள் மித்ரா.

''வேகாத வெயில்ல வந்திருக்க. இந்தா.... மோர். குடிச்சிட்டு அப்புறம் சொல்லு,'' என்று சித்ரா சொன்னதும், டம்ளரை வாங்கி ஒரே மடக்கில் தீர்த்தாள் மித்ரா.

''அக்கா, குடும்ப தகராறு, சொத்து தகராறுல தான் நிறைய கொலை, கொள்ளை நடக்குதுங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, அவிநாசியில சொத்து தகராறுல, சொந்த சித்தப்பாவை ஒருத்தரு கொன்னு கூறு போட்டாரு. அதுக்கப்புறம், சேவூர்லேயும் மகனே அப்பாவை கொலை செஞ்சாரு. போன வாரம், மது போதையில, பக்கத்து தோட்டத்தில வயதான விவசாய தம்பதியை, உறவினரே அரிவாளால வெட்டி சாய்ச்சிட்டாரு,''

''இதேமாதிரி தொடர்ந்து நடக்கிற கொலை சம்பவத்தால போலீஸ்க்காரங்க 'ஷாக்' ஆகிட்டாங்களாம். 'தொடர்ந்து இந்த மாதிரி அபசகுனமா நடக்குதே'ன்னு, ஸ்டேஷனில் பூஜை செஞ்சாங்களாம். இருந்தாலும், ஏதாவது மறுபடியும் நடந்துடுமோன்னு, போலீஸ்காரங்க ஒருவித டென்ஷனில் தான் இருக்காங்களாம்,'' மித்ரா விளக்கினாள்.

''இப்படி ரூரல் ஏரியாவில் ஏதாவது நடக்கறதால, போலீசாருக்கு ஒரே தலைவலி தான் மித்து. ஏற்கனவே, மூனு மாசம் முன்னாடி பல்லடம் பக்கத்துல நடந்த, மூன்று பேர் கொலை வழக்குல எவ்வித முன்னேற்றம் இல்லாமல், கிணற்றில் போட்ட கல்லாக கெடக்குது. இந்த பிரச்னை ஓடிட்டு இருக்கற நேரத்தில், அவிநாசியில, விவசாய தம்பதி கொலை நடந்துச்சு...''

''போலீஸ் ரொம்ப அப்செட்டான நேரத்தில, டிவி ரிப்போர்ட்டர்ஸ், ஒன்னுக்கு ரெண்டாக தகவல பரப்பிட்டாங்கன்னு ஒற்றர் படை போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பிட்டாங்க. நல்ல வேளையாக கொலையாளியை பிடிச்சுட்டாங்க. இதில ஒரு விஷயம் என்னன்னா, கொலை செய்த ஆசாமி, தற்கொலை செஞ்சுக்கலாம்னு, 'புல் சரக்கில' டூவீலரை தாறுமாறா ஓட்டிட்டு, ஒன்வேயில போயிருக்காரு. ஆனா, வேன் மோதி காயத்துடன் தப்பிச்சிட்டாரு... ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகியிருந்தால் போலீசாருக்கு பெரும் குடைச்சல் ஏற்பட்டு இருக்கும். தப்பிச்சிட்டாங்க...''

வசூல் மன்னன்


''ஓஹோ...'' என்ற மித்ரா, ''குறுநில மன்னர் போல் செயல்படும் போலீஸ் அதிகாரி, வசூல் வேட்டையில் கில்லியா இருக்கறாராம்,'' என்றாள்.

''அது என்ன மேட்டர்?''

''மலை சப்-டிவிஷன் ஆபீசில் உள்ள ஒரு போலீஸ்காரர் நங்கூரம் போட்டு உக்கார்ந்திட்டு, ஒவ்வொரு ஸ்டேஷனில் இருந்தும், மாசாமாசம், 6 ஆயிரம் குடுக்கணும்னு கட் அண்ட் ரைட்டா கேட்கிறாராம். அதுவும், பணத்தை, ஒரு பெட்ரோல் பங்க்கில் கொடுக்க சொல்லி வாங்கிக்கிறார். அதுமட்டுமில்லாம, அதிகாரி பெயரை சொல்லி தனக்கு வேண்டிய நபர்களை, செக்போஸ்ட் டியூட்டி போடறாரு,''

''அங்கு கனிமவளங்களை கொள்ளையடிக்கிற கும்பல் கிட்ட தனியாக ஒரு வசூல் நடக்குது. இவரு வைக்கிறது தான் சட்டமாம். இவரை பத்தி இப்ப சார்ஜ் எடுத்துள்ள புதிய அதிகாரிக்கும் ஒன்னும் தெரியாது போல. இதுபோன்றவரை களையெடுக்கவில்லையென்றால், அதிகாரிக்கு தான் கெட்ட பெயர் வரும்,'' என மித்ரா சொல்லிக் கொண்டிருந்த போது, அவளது போன் ஒலித்தது.

''ஹாய்... மகேஷ் எப்டியிருக்க. ஆபீஸ் ஒழுங்கா போறயா. வசூல் நல்லா ஆகுதா?'' என இரண்டு நிமிடம் பேசி போனை அணைத்தாள் மித்ரா.

''மித்து, அதே 'மலை' ஊரில் டிராபிக் குட்டி ஆபீசர் ஒருவர் 'ஜொள் நாயகன்' என்று பட்டம் வாங்கி இருக்கிறார். வாகன தணிக்கை என்ற பெயரில் டூவீலரில் வரும் லேடிஸ்களை நிறுத்தி காக்க வைப்பது, போன் நம்பர் வாங்கிட்டு,'சொல்லுங்க மேடம். நல்லாருக்கீங்களா...' அப்படி இப்படின்னு பேசுறதுன்னுட்டு அநாகரீகமாக நடந்துக்கிறார். இவரை பார்த்தாலே, லேடீஸ் வண்டியை திருப்பிட்டு போயிடறாங்க. 'குழலுாதும்......... ' குட்டி ஆபீசருக்கு, மாவட்ட ஆபீசர், ஒரு கடிவாளம் போட்டா தேவலை,'' என்றாள் சித்ரா.

இஷ்டப்படி...


''அக்கா... மின் வாரியத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்வதாக சொன்ன வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை. இதனை, ஒரு சில அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், அரசுக்கு எதிராக கடுமையாக போராட்டம் நடத்தினால் மட்டுமே, தேர்தல் நேரத்தில் கோரிக்கைகளை வெல்ல முடியும்,' என பிரசாரம் செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர்,''

''இத தெரிஞ்சுகிட்ட சமூக ஆர்வலர்னு தனக்குத்தானே பேர் வெச்சுகிட்டு, அடிக்கடி கவர்மென்ட்டுக்கு எதிரா செயல்படும் ஒருவர், கவர்மென்ட்டுக்கு ஆப்போசிட்டா, போராட்டத்தை துாண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டரி டம் புகார் அளித்துள்ளார். இத கேள்விப்பட்ட மத்த சங்கத்தினர், 'என்ன கொடுமை சரவணன்னு' கிண்டல் பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''மித்து... அவங்கவங்க தேவையை பொறுத்து முதுகை எப்படி வேண்டு மானாலும் வளைச்சிப்பாங்க...'' என்ற சித்ரா, '' தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்கள் ஒதுக்கீடு மூன்றில் ஒரு பகுதியாக குறைச்சு விட்டுட்டாங்க. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் அதிக நாட்கள் வேலைக்கு வந்தவங்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். சில ஊராட்சிகளில் அதிக பண்ட் எடுத்து செலவு செஞ்சதை கண்டுபிடிச்சுட்டாங்க. ஒதுக்கீடு ரொம்பவும் குறைஞ்சதால, திட்டத்திலிருந்து நிதியை எடுத்து மத்த செலவுகளை செய்ய முடியாத நிலைக்கு வந்துவிட்டதாக, ஊரக வளர்ச்சித் துறையில் ஒரே பரபரப்பு பேச்சா இருக்குதுடி,''

'மாஜி' அதிர்ச்சி


''சமூக தணிக்கையை கரெக்டா செய்தால், எல்லா முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வந்துடுங்க்கா'' சொன்ன மித்ரா, ''அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம் செய்து வருகின்றனர். அப்படி, பாளையக்காட்டிலுள்ள ஒரு டீக்கடையில, மாஜி எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார். டீக்குடிக்க வந்த ரெண்டு இளைஞர்களிடம், நோட்டீஸ் கொடுத்து, 'நீங்க யாருக்கு ஆதரவாக இருப்பீங்கன்னு,' கேட்டுள்ளார்,''

''அதற்கு, விஜய் கட்சிக்கு சப்போர்ட்டு பண்ணுவோம்னு,' சொன்னத கேட்டு, ஜெர்க்கான மாஜி, ''ஏம்ப்பா, -அ.தி.மு.க., - தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சி இருக்குது. ஆட்சியில் இருந்த இந்த கட்சிகள் திருப்பூருக்கு என்ன செய்ததுன்னு எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பா, அ.தி.மு.க., ஆட்சியில் திருப்பூர் எப்படி வளர்ச்சி பெற்றது என்று நினைச்சு பார்க்க வேண்டும். அதவிட்டுட்டு புதிய கட்சிக்கு சப்போர்ட் பண்றது சரியான்னு யோசிங்க தம்பிகளான்னு,' அட்வைஸ் செய்தாராம்,'' என்றாள்.

''இடத்தை தக்க வச்சுக்க என்ெனன்ன பேச வேண்டியிருக்கு பாரு,'' சொன்ன சித்ரா, ''வாகன சோதனையில போலீசாருக்கு 'சோதனை' தந்த ஆசாமி பத்தி தெரியுமா?'' என்றாள்.

''சொல்லுங்க்கா...''

'காமெடி' வாலிபர்


''லாஸ்ட் சண்டே, ஊத்துக்குளி ரோடு,எஸ்.ஆர்.சி., மில் ரவுண்டானாவுல, போலீசார் வாகன சோதனை செஞ்சிட்டிருந்தாங்க. அப்ப, ெஹல்மெட் இல்லாம வந்தவரை நிறுத்தி, பைன் போடவே, வண்டி சாவியை எடுத்துள்ளனர். அதப்பார்த்த அந்த வாலிபர், 'என்னை விட்டுருங்க. நான் வூட்டுக்கு போகணும்' என கேட்டு, வண்டி டயரை கட்டிப்பிடிச்சுட்டு அழுதார்,''

''ெஹல்மெட் போடல. 'சரக்கும்' அடிச்சிருக்க. நீ மொதல்ல எந்திரி,' என, போலீசார் வாலிபரை எழுப்ப முயன்றனர். ஆனால், பம்பரை இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டவாறு அடம் பிடித்து அழுத அவரை, மூனு போலீஸ்காரங்க ஒன்னா சேர்ந்து குண்டுகட்டா துாக்கி, ஒரு ஆட்டோவில ஏத்தி, அவங்க வீட்டுக்கு அனுப்பி நொந்து போயிட்டாங்களாம்,'' சிரித்தபடியே சொன்னாள் சித்ரா.

''இது உண்மையிலயே போலீசுக்கு சோதனைதாங்க்கா...'' என பதிலுக்கு சிரித்த மித்ரா, ''அக்கா, அரிசிக்கடை வீதியில, பாலிதீன் கவர் வியாபாரம் கொடி கட்டி பறக்குதாம்,'' என்றாள்.

''அது எப்பவும் இல்லீகலா நடக்குறதானே மித்து...''

''அதில்லக்கா. அரிசிக்கடை வீதி, கே.எஸ்.சி., ஸ்கூல் வீதியிலுள்ள பாலிதீன் கவர்களை 'ஹோல்சேல்' பண்ற வியாபாரிகள் ஒன்னா சேர்ந்து, '10 எல்' வசூலிச்சு, கார்ப்ரேஷனில் சம்பந்தப்பட்ட ஆபீசருக்கு கப்பம் கட்டிட்டாங்களாம். அதனால, தைரியமா, கடைக்கு முன்னாடியே பாலிதீன் கவரை போட்டு சேல்ஸ் பண்றாங்களாம். இதப்பார்த்து சமூக ஆர்வலர் ஒருத்தர் கேட்டதுக்கு, 'நாங்க எதுக்கு பயப்படணும். அதுதான், 'பத்து' கொடுத்தாச்சே,'ன்னு சொல்லி சிரிக்கறாங்களாம்,'' ஆவேசமாக சொன்ன மித்ரா, ''ஓ.கே., நான் கெளம்பறேன்,'' என மித்ரா புறப்பட, வழியனுப்பி வைத்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us