/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 26, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஜான்பாஷா வரவேற்றார். ஆசிரியர் கணேசபாண்டியன், போதை பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.
போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், உடுமலை பொள்ளாச்சி ரோட்டில், மனிதச்சங்கிலியாக போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
தொடர்ந்து மாணவர்கள் பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தினர். ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.