ADDED : அக் 16, 2025 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கல்லாங்காடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த சிலர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர். அதில், சந்தேகப்படும் விதமாக இருந்த ராமன், 20 என்பவரிடம் விசாரித்து, சோதனை செய்தனர். அவரிடம், 19 மாத்திரைகள் இருந்தன. போலீசார் அவரை கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.