/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 16, 2025 08:20 PM

உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.
மாணவர்கள் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர். நாட்டுநலப்பணி திட்ட மாணவர் சந்துரு வரவேற்றார். பேரணி, பள்ளியில் துவங்கி, பொள்ளாச்சி ரோடு, கென்னடி நகர் மில்கேட் எதிர்புறம் பூலாங்கிணர் கிராம வீதிகள் வழியாக நடந்தது.
தொடர்ந்து நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன், குழந்தை தொழிலாளர் முறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி, மாணவர்கள்உடல்நல ஆரோக்கியத்துடன் இருக்க வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து, ஆசிரியர் கணேச பாண்டியன் பேசினார். ஆசிரியர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார்.