/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் போதைப்பொருள் புழக்கம்; புதிய டி.எஸ்.பி. தடுப்பாரா?
/
பல்லடத்தில் போதைப்பொருள் புழக்கம்; புதிய டி.எஸ்.பி. தடுப்பாரா?
பல்லடத்தில் போதைப்பொருள் புழக்கம்; புதிய டி.எஸ்.பி. தடுப்பாரா?
பல்லடத்தில் போதைப்பொருள் புழக்கம்; புதிய டி.எஸ்.பி. தடுப்பாரா?
ADDED : பிப் 03, 2026 05:58 AM

பல்லடம்: பல்லடம் டி.எஸ்.பி.யாக இருந்த சுரேஷ், கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்திபன், பணியிடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
வட மாநில மற்றும் தென் மாவட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பல்லடம் வட்டாரத்தில், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் புழக்கம் பரவலாக உள்ளது. போலீசார், அவ்வப்போது குற்றவாளிகளை கைது செய்த போதும், போதைப் பொருட்களின் பயன்பாடு மறைமுகமாக அதிகரித்து வருகிறது.
மேலும். வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வருபவர்களால்தான், பல்லடத்தில் அதிக அளவு குற்ற சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளன. எனவே, வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்களை கண்காணிப்பதுடன், போதைப் பொருள் விற்பனையை தடுப்பதுடன், இரவு நேரங்களில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கவும் புதிய டி.எஸ்.பி., முனைப்பு காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது .