ADDED : ஜன 05, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.
வெள்ளக்கோவில், புதுப்பை, முத்துார், காங்கயம், மயில்ரங்கம் பகுதி விவசாயிகள் முருங்கையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் முருங்கை விற்பனைக்கு செல்கிறது. கிராக்கி ஏற்படும் காலங்களில் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
கடந்த மாதம் பெய்த மழையால் முருங்கை செடிகளில் பூக்கள் குறைந்து, காய்ப்பும் குறைந்தது. கடந்த இரு வாரமாக 2 டன் என்ற அளவில் வரத்து குறைவாக உள்ளது.
நேற்று 450 கிலோ மட்டுமே வரத்து இருந்தது. செடி முருங்கை, மரமுருங்கை கிலோ 150 ரூபாய், கரும்பு முருங்கை கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனையானது.
