/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதையில் தகராறு: அசாம் வாலிபர் கொலை
/
போதையில் தகராறு: அசாம் வாலிபர் கொலை
ADDED : அக் 13, 2025 01:29 AM
திருப்பூர்:திருப்பூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அசாம் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ், 25. இவரது நண்பர் அனில், 28. திருப்பூர் சிறுபூலுவபட்டி ரங்கநாதபுரம், தெய்வீக நகரில் ஹாஸ்டலில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று அறையில் அமர்ந்து, இருவரும் மது அருந்தினர்.
அப்போது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அனில், ஆகாைஷ கத்தியால் குத்தினார். இதில், ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். அனிலை தடுக்க முயன்ற, அதே அறையில் தங்கியிருந்த விக்கி புரோஜா, 23 என்பவரும் காயமடைந்தார். கொலை வழக்கு பதிந்து, 15 வேலம்பாளையம் போலீசார் அனிலை கைது செய்தனர்.