/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சி காரணமாக பி.ஏ.பி., பாசனத்தில்... நீர் திருட்டு அதிகரிப்பு!தேர்தல் பணியால் கண்காணிப்பில் சிக்கல்
/
வறட்சி காரணமாக பி.ஏ.பி., பாசனத்தில்... நீர் திருட்டு அதிகரிப்பு!தேர்தல் பணியால் கண்காணிப்பில் சிக்கல்
வறட்சி காரணமாக பி.ஏ.பி., பாசனத்தில்... நீர் திருட்டு அதிகரிப்பு!தேர்தல் பணியால் கண்காணிப்பில் சிக்கல்
வறட்சி காரணமாக பி.ஏ.பி., பாசனத்தில்... நீர் திருட்டு அதிகரிப்பு!தேர்தல் பணியால் கண்காணிப்பில் சிக்கல்
ADDED : மார் 31, 2024 08:54 PM
உடுமலை:பி.ஏ.பி., பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணியோடு, நீர் திருட்டைத்தடுக்க கண்காணிப்பு பணியையும் மேற்கொள்ள வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. வழக்கமாக, பி.ஏ.பி., பாசனத்திற்கு, 5 சுற்றுக்கள், 135 நாட்கள் மண்டல பாசன காலமாக கொண்டு நீர் திறக்கப்படும்.
கடந்தாண்டு, பருவமழை ஏமாற்றியதால், திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், நான்கு மற்றும் முதல் மண்டல பாசனத்திற்கு, இரண்டரை சுற்றுக்கள் மட்டும் நீர் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குளிர் கால மழை மற்றும் கோடை கால மழை ஏமாற்றி வருவதால், திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. மேலும், அரை சுற்று குறைந்து, இரண்டு சுற்றுக்கள் மட்டுமே வழங்க முடியும் என்ற சூழல் உள்ளது.
ஏற்கனவே, பற்றாக்குறையாக நீர் வழங்கப்படும் நிலையில், கடந்த சில மாதமாக மழை பொழிவு இல்லாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து, கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. தற்போது இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
பிரதான கால்வாய், கிளைக்கால்வாய்களில், நேரடியாகவும், மறைமுகமாகவும் நீர் திருடப்பட்டு வருகிறது.
தற்போது வழங்கப்படும் நீரை முழுமையாக பாசன நிலங்களுக்கு வழங்கும் வகையில், நீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய் கரைகளின் இருபுறமும், விதிமீறி அமைந்துள்ள கிணறு, போர்வெல்கள் வாயிலாகவும், சைடுபோர் அமைத்தும், நேரடியாக குழாய் அமைத்தும், பாசன நீர் திருடப்படுகிறது.
தற்போது, கடும் வெயில் காணப்படுவதால், நீர் திருட்டு அதிகரித்து வருகிறது. பாசனத்திற்குட்பட்ட நிலங்களுக்கு உரிய நீர் கிடைப்பதில்லை.
எனவே, பாசன நீர் திருட்டை தடுக்கும் வகையில், நீர் வளத்துறை, வருவாய்த்துறை, மின் வாரியம் மற்றும் போலீசார் கொண்ட கண்காணிப்பு குழு கிராமம் வாரியாகவும், கிளைக்கால்வாய், மடைகள் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது தேர்தல் என்பதால், நீர்வளத்துறை மற்றும் போலீசார், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதால், விவசாயிகளுக்கு உரிய நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணியோடு, பாசன நீரை கடைமடை வரை கொண்டு சேர்க்கும் பணியிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்கும் வகையில், கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக, உரிய அலுவலர்கள், போலீசாரை நியமிக்க வேண்டும்.
நீர் திருட்டு கண்டறியப்பட்டால், பாரபட்சமின்றி, போலீஸ் ஸ்டேஷன்களில்வழக்கு பதிவு, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

