/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரி உயர்வால் வீட்டு வாடகையும் உச்சத்துக்கு சென்றது! அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
/
வரி உயர்வால் வீட்டு வாடகையும் உச்சத்துக்கு சென்றது! அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
வரி உயர்வால் வீட்டு வாடகையும் உச்சத்துக்கு சென்றது! அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
வரி உயர்வால் வீட்டு வாடகையும் உச்சத்துக்கு சென்றது! அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : டிச 03, 2024 11:49 PM

திருப்பூர் : ''திருப்பூர் மாநகராட்சியில், கடும் வரி உயர்வால், ஏழை, எளிய மக்களின் வீட்டுவாடகையும் உச்சத்துக்கே சென்று விட்டது,'' என, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் மாநகராட்சியில், அபரிமிதமான சொத்து வரி, குப்பைவரி, தொழில்வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு செய்யும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்தும், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாநகராட்சி அலுவலகம் அருகே, காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 மணிக்கு நிறைவு பெற்றது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமை வகித்தார்; கவுன்சிலர் கண்ணப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் போராட்டத்தை துவக்கி வைத்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் ராதாகிருஷ்ணன், ஆனந்தன், விஜயகுமார், மகேந்திரன், முன்னாள் எம்.பி., சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், நடராஜ், நடராஜன் உட்பட, மாநகராட்சி கவுன்சிலர்கள் கருப்புநிற சர்ட் அணிந்து பங்கேற்றனர். நிறைவாக, அ.தி.மு.க., மேற்கு மண்டல பொறுப்பாளர் வேலுமணி, அனைவருக்கும் பழச்சாறு கொடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவைத்தார்.
முன்னதாக, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
வெள்ளையனை வெளியேற்ற வேண்டி, திருப்பூர் குமரன் இன்னுயிரை நீத்து, போராடினார்; இன்று, தி.மு.க., கொள்ளையர்களை வெளியேற்ற வேண்டிய அ.தி.மு.க., போராடுகிறது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த கொள்ளையர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
தமிழகத்தின் சுதந்திர போராட்டத்துக்கு, திருப்பூரில் அடிக்கல் நாட்டியுள்ளோம். கடும் வரி உயர்வால், ஏழை, எளிய மக்களின் வீட்டு வாடகையும் உச்சத்துக்கே சென்றுவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில், எப்போது கொலை நடக்குமோ என்று மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது.
திருப்பூர் பனியன் தொழில் வெளிமாநிலங்களுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆட்சியை மீண்டும் மலர செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.