/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டி தீ வைப்பு; கருகும் மரத்தால் ஆபத்து
/
குப்பை கொட்டி தீ வைப்பு; கருகும் மரத்தால் ஆபத்து
ADDED : ஜூலை 29, 2025 11:33 PM
திருப்பூர்; சாமளாபுரம் பேரூராட்சி, வேலாயுதம்பாளையம் கிராமம். சோமனுார் - திருப்பூர் பிரதான ரோட்டில் அமைந்துள்ளது.
இப்பகுதியில், பிரதான ரோட்டை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். பேரூராட்சியிலிருந்து இப்பகுதிக்கு குப்பை சேகரிக்க வாகனமோ, துாய்மைப் பணியாளர்களோ வருவதில்லை. இதனால், குப்பை காற்றில் பறந்து ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அவதியை ஏற்படுத்துகிறது.
பல நேரங்களில் அதிகளவில் குப்பை சேர்ந்தால் அதற்கு தீ வைத்து எரிப்பதால் புகை மூட்டம் சூழ்கிறது. இந்த இடத்தில் உள்ள வேப்ப மரமும் தீயில் கருகி, சேதமடைகிறது. எனவே, முறையாக குப்பை கழிவுகளை அகற்றவும், ரோட்டோரம் குப்பைக்கு தீ வைக்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.