sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழைக்காலத்தில் தாராபுரம் நெடுஞ்சாலை...  ஓடையாகிறது!அதிகாரிகள் அலட்சியத்தால் நிதி வீணடிப்பு

/

மழைக்காலத்தில் தாராபுரம் நெடுஞ்சாலை...  ஓடையாகிறது!அதிகாரிகள் அலட்சியத்தால் நிதி வீணடிப்பு

மழைக்காலத்தில் தாராபுரம் நெடுஞ்சாலை...  ஓடையாகிறது!அதிகாரிகள் அலட்சியத்தால் நிதி வீணடிப்பு

மழைக்காலத்தில் தாராபுரம் நெடுஞ்சாலை...  ஓடையாகிறது!அதிகாரிகள் அலட்சியத்தால் நிதி வீணடிப்பு


ADDED : டிச 01, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் காட்டுவதால், உடுமலை நகரின் பிரதான ரோடான தாராபுரம் ரோடு, மழைக்காலத்தில், ஓடையாக மாறுகிறது; பல கோடி ரூபாய் அரசு நிதியில் கட்டப்பட்ட வடிகாலும் காட்சிப்பொருளாகி விட்டது.

உடுமலை- - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இந்த நெடுஞ்சாலை, 2 கி.மீ., தொலைவுக்கும் அதிகமாக உடுமலை நகரப்பகுதியில், அமைந்துள்ளது.

ஆக்கிரமிப்பு அதிகரிப்பு, திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட வடிகால் உள்ளிட்ட பிரச்னைகளால் மழைக்காலத்தில், மாநில நெடுஞ்சாலை ஓடையாக மாறி வாகன ஓட்டுநர்கள் தவிக்கின்றனர். போக்குவரத்து துண்டிக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

வடிகால் எங்கே? தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியில், நிலவும் நெரிசலை தவிர்க்க, ரோடு விரிவாக்கப்பணிகளுக்கு, 4.5 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியது.

முதற்கட்டமாக, 400 மீ., தொலைவுக்கு, ரோடு, 15.61 மீட்டருக்கு, விரிவாக்கம் செய்யப்பட்டது. மழை நீர் ரோட்டில், தேங்குவதை தவிர்க்க, ரோட்டோரத்தில், மழை நீர் வடிகால் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டது.

கடந்த, 2020ல் பணிகள் நடந்தது. ஆனால், அரசு நிதியில், மேற்கொள்ளப்பட்ட பணிகளால், எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

தற்போதும் மழைக்காலத்தில், தாராபுரம் ரோடு ஓடையாக மாறி, மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரோட்டோரத்தில் கட்டப்பட்ட வடிகாலில், மழை நீர் சென்று சேர எவ்வித பணிகளும் செய்யவில்லை.

இதனால், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டேட் பாங்க் காலனி சந்திப்பு வரை, ரோட்டில் தேங்கும் மழை நீரில், வாகனங்கள் தத்தளித்து செல்ல வேண்டியுள்ளது.

மழைக்குப்பிறகு, ஓடுதளம் குண்டும், குழியுமாக மாறி, விபத்து ஏற்படுகிறது. 'வடிகால் கட்டப்படும் முன்பு கூட மழை நீர் அருகிலுள்ள ஓடையில் சேர்ந்து, ரோட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை,' என வாகன ஓட்டுநர்கள் புலம்புகின்றனர். சாரல் மழைக்கே, தாராபுரம் ரோட்டில் பயணிக்க வாகன ஓட்டுநர்கள் அச்சப்படும் நிலையே தற்போது உள்ளது.

ஆக்கிரமிப்பு அதிகம் மாநில நெடுஞ்சாலை, 2 கி.மீ., தொலைவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, சென்டர் மீடியன் வைக்கப்பட்டது. ஆனால், ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்தது.

இதனால், சென்டர் மீடியனுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் இடையே உள்ள குறுகலான ஓடுதளத்தில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டியுள்ளது.

காலை, மாலை நேரங்களில், அதிக நெரிசல் ஏற்படுகிறது; கனரக வாகனங்கள் செல்லும் போது பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இவ்வாறு, நகரப்பகுதியில், மாநில நெடுஞ்சாலை, ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது.

நிர்வாக அலுவலகம் மடத்துக்குளத்திலும், ரோடு உடுமலையிலும் அமைந்துள்ளதால், சிறிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கூட, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

நீண்ட நாள் பிரச்னை பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து துவங்கும் இந்த ரோட்டில், அய்யப்பன் கோவில் ரோடு, நுாறு அடி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி ரோடு உள்ளிட்ட ரோடுகள் இணைகின்றன.

இதே போல், ராஜகாளியம்மன் கோவில் அருகிலும் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதிகளில், தேவையான குறியீடுகள் இல்லை; ரோடும் குறுகலாக உள்ளது. இதனால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில், உயிரிழப்பு ஏற்படும் அபாயமுள்ள சந்திப்பை மேம்படுத்த, கலெக்டர் தலைமையிலான கமிட்டி வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

உடுமலை - -தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் நிலவும் பிரச்னைகளுக்கு, நிரந்தர தீர்வு காண, கோட்ட அளவிலான அதிகாரிகள் குழு நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, மக்கள் தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us