/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புழுதி பறக்கும் தேசிய நெடுஞ்சாலை! வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
புழுதி பறக்கும் தேசிய நெடுஞ்சாலை! வாகன ஓட்டுநர்கள் திணறல்
புழுதி பறக்கும் தேசிய நெடுஞ்சாலை! வாகன ஓட்டுநர்கள் திணறல்
புழுதி பறக்கும் தேசிய நெடுஞ்சாலை! வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : ஜூன் 24, 2025 10:03 PM
உடுமலை; தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு நீண்ட காலமாக கண்டுகொள்ளப்படாததால், ரோட்டோரத்தில், அதிகரித்துள்ள குழி மற்றும் மண் குவியலால் நிலைதடுமாறி, வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது.
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் முதல் கோலார்பட்டி வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட பராமரிப்பில் உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில், பாலப்பம்பட்டி முதல் மடத்துக்குளம் வரை, விரிவாக்க பணிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது பாலப்பம்பட்டி அருகே, நான்கு வழிச்சாலை அணுகுசாலை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு அப்பகுதி மட்டும், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், ரோட்டின் இருபுறங்களிலும், பள்ளம் ஏற்பட்டு, சீர் இல்லாமல், குழிகள் அதிகரித்துள்ளது. இதில், மண் குவிந்து கிடக்கிறது.
எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஓரமாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் ரோட்டோரத்திலுள்ள மண் மற்றும் குழியால், நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
தற்போது பலத்த காற்று வீசி வருவதால், மைவாடி பிரிவு, நரசிங்காபுரம் உள்ளிட்ட இடங்களில், புழுதி பறந்து, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பயணிக்கவே திணற வேண்டிய நிலை உள்ளது.
விபத்துகளை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், ரோட்டோரத்தில் குவிந்துள்ள மண் திட்டுகளை அகற்ற வேண்டும்; சீரற்ற முறையில், இருக்கும் ரோட்டின் விளிம்புகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.