/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாயம் பூசப்பட்ட பட்டாணி பறிமுதல்
/
சாயம் பூசப்பட்ட பட்டாணி பறிமுதல்
ADDED : ஆக 20, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, கைகாட்டிப்புதுார் வாரச்சந்தையில், விற்கப்படும் பட்டாணியில் சாயம் கலந்துள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இது குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் பிரசுரமானது. அவிநாசி வட்டார உணவு பாது காப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு வாரச்சந்தையில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, ரசாயன சாயம் பூசப்பட்ட ஆறு கிலோ பட்டாணியை ஒரு வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்தனர். முதல் முறை என்பதால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மீண்டும் இதுபோல், சாயம் பூசப்பட்ட பட்டாணி மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால், அபராதம் மற்றும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

