/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியற்ற ஆலைகள் மீது பாயட்டும் நடவடிக்கை! பொங்கியெழும் சாய ஆலைகள்
/
அனுமதியற்ற ஆலைகள் மீது பாயட்டும் நடவடிக்கை! பொங்கியெழும் சாய ஆலைகள்
அனுமதியற்ற ஆலைகள் மீது பாயட்டும் நடவடிக்கை! பொங்கியெழும் சாய ஆலைகள்
அனுமதியற்ற ஆலைகள் மீது பாயட்டும் நடவடிக்கை! பொங்கியெழும் சாய ஆலைகள்
UPDATED : டிச 28, 2024 07:40 AM
ADDED : டிச 27, 2024 11:35 PM

திருப்பூர், ; ''முறையான அனுமதி பெறாமல் இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்தகைய ஆலைகளுக்கு, சாயம் மற்றும் கெமிக்கல் விற்பதை தவிர்க்க வேண்டும்,'' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் பேசினார்.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத்தில், திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் தலைமை வகித்து பேசியதாவது:
அனுமதி இல்லாமல் இயங்கி வரும் சாய ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி இல்லாமல் இயங்கும் சாய ஆலைகளுக்கு, சாயம் மற்றும் கெமிக்கல் விற்பதை தவிர்க்க வேண்டும். பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஆலைகளுக்கு, 'ஜாப் ஒர்க்' ஆர்டர்களை முழுமையாக கொடுத்து ஆதரிக்க வேண்டும். சாயமிடும் கட்டணங்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் கொடுத்து உதவ வேண்டும். அப்போதுதான், பின்னலாடை உற்பத்தி துறையில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். இவ்வாறு, காந்திராஜன் பேசினார்.
சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க தலைவர் நாகேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். சாயத்தொழில் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, இருதரப்பினரும் ஆலோசித்தனர்.
''முறையான அனுமதி இல்லாமல் ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் போன்ற பகுதிகளில் இயங்கும் சாய ஆலைகளால், திருப்பூரில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு பணியை முழுமையாக செய்ய முடிவதில்லை. சாய ஆலைகள், 'ஜாப் ஒர்க்' ஆர்டர் பெறுவது சவாலாக உள்ளது'' என்று சாய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாதேஸ்வரன், திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்கச் செயலாளர் செந்தில், பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
---
திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் தலைமையில் நடந்தது. சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க தலைவர் நாகேஷ், சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.