/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு; சாய ஆலை சங்கம் அறிவிப்பு
/
ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு; சாய ஆலை சங்கம் அறிவிப்பு
ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு; சாய ஆலை சங்கம் அறிவிப்பு
ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு; சாய ஆலை சங்கம் அறிவிப்பு
ADDED : ஜன 05, 2024 11:47 PM
திருப்பூர்:வேலம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரும், ஆர்ப்பாட்டத்துக்கு, ஆதரவு அளிப்பதாக, சாய ஆலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள, சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, கட்டண வசூல் முறை, மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும், 7ம் தேதி, வேலம்பட்டி சுங்கசாவடி எதிர்ப்பு குழு அறிவித்துள்ளது.
இது குறித்து, வேலம்பட்டி சுங்கசாவடி எதிர்ப்பு குழுவினர் கூறியதாவது:
மத்திய அமைச்சரின் அறிவிப்பால், தாராபுரம் ரோடு அவிநாசி வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைவரும் பாதிக்கப்படுவர். குறிப்பாக, குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வாகனங்கள், தொழில் ரீதியாக அடிக்கடி சென்றுவர வேண்டியிருக்கும்; சுங்க கட்டணம் விதிக்கப்பட்டால், குறு, சிறு நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து தொழில் அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டுமென, போராட்டக்குழுவினர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன்படி, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் அறிவித்துள்ளார்.