/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாயமிடும் இயந்திரம் வடிவமைப்பு 'டோணி இன்ஜினியரிங்' முன்னோடி
/
சாயமிடும் இயந்திரம் வடிவமைப்பு 'டோணி இன்ஜினியரிங்' முன்னோடி
சாயமிடும் இயந்திரம் வடிவமைப்பு 'டோணி இன்ஜினியரிங்' முன்னோடி
சாயமிடும் இயந்திரம் வடிவமைப்பு 'டோணி இன்ஜினியரிங்' முன்னோடி
ADDED : மார் 02, 2024 01:18 AM

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு, 48 ஆயிரம் சதுரடியில், தகுதி வாய்ந்த, 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன், புதிய தொழில்நுட்பத்தை கொண்டு, துணி சாயமிடும் இயந்திரங்களை, 34 ஆண்டுகளுக்கு மேலாக, வடிவமைத்து வருகிறது.
புதிய தயாரிப்புகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தர நிலைகளில் உத்தரவாதத்தையும் அளித்து, எதிர்கால சந்தைக்கு ஏற்ப மாறிவருகிறது. தற்போது, புதிய முயற்சியாக, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' என்ற இலக்கை நோக்கி, உற்பத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.
டோணிஸ் புதிய 'எக்கோ டெக் 2.0' சீரிஸ்களை குறைந்த நீர் பயன்பாடு மற்றும் இயக்க செலவு குறைத்தல் போன்ற பணிகளை முதன்மையாககொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 'எக்கோ டெக் 2.0' தொழில்நுட்பத்தில், பல்துறை சாயமிடுதல், குறைந்த அளவு மின்சாரம் மற்றும் நீர் பயன்பாடு மூலம் சாயமிடுதல் முதல் தரத்தை அடைய' ஆட்டோ அட்ஜஸ்டபிள் சேம்பர்' பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், புதிய மாடல் பி.எல்.சி., அதிவேக பயனர் அனுபவம் மற்றும் பல்பணி திறன் கொண்டது. கழிவுநீரை மீண்டும் உபயோகப்படுத்தும் முறையை அறிமுகம் செய்வதன் மூலமாக, தண்ணீரை சேமித்து, மொத்த செலவுகளை குறைக்கிறது.

