/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ - நாம் திட்டத்தில் விளைபொருள் ஏலம்
/
இ - நாம் திட்டத்தில் விளைபொருள் ஏலம்
ADDED : பிப் 16, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்தில், 19 விவசாயிகள், 2 டன், இரண்டாம் தர கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். குறைந்த பட்சமாக, ரூ.54.29க்கும், அதிகபட்சமாக, ரூ. 76.10க்கும் விற்பனையானது.
அதே போல், 5 விவசாயிகள், 24.570 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக, குவிண்டால், ரூ.2,270க்கும், குறைந்த பட்சமாக, ரூ. 2,200க்கும் விற்பனையானது. விவசாயிகள், 94439 62834 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விற்பனை செய்யலாம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.