/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ - நாம் திட்டத்தில் மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2,310க்கு விற்பனை
/
இ - நாம் திட்டத்தில் மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2,310க்கு விற்பனை
இ - நாம் திட்டத்தில் மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2,310க்கு விற்பனை
இ - நாம் திட்டத்தில் மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2,310க்கு விற்பனை
ADDED : பிப் 12, 2024 11:23 PM

உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ், 413 குவிண்டால் மக்காச்சோளம் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது.
உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. தற்போது இப்பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து, உலர் களத்தில் காய வைத்து, இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு, ஆறு விவசாயிகள், 413 குவிண்டால் மக்காச்சோளம் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ - நாம்) திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்டது.
பல்வேறு விவசாயிகள் ஏல முறையில் விலை கேட்டதில், விலை இறுதி செய்யப்பட்டது. ஒரு கிலோ, அதிகபட்சமாக, குவிண்டால் ரூ.2,310க்கும், குறைந்த பட்சமாக, ரூ.2,280க்கும் விற்பனையானது. மொத்தம், 24.88 டன் மக்காச்சோளம், 5 லட்சத்து, 69 ஆயிரத்து, 610 ரூபாய்க்கு விற்பனையானது.
இ - நாம் திட்டத்தின் கீழ், தேசிய அளவிலான வியாபாரிகள் பங்கேற்பதோடு, இடைத்தரகர்கள் இல்லாமல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம். உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.