ADDED : பிப் 13, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமனுார் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான குறைகேட்பு கூட்டம், நாளை காலை, (14ம் தேதி) 11:00 மணிக்கு நடக்கிறது.
கோட்ட செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், சோமனுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்,'' என்று தெரிவித்துள்ளார். அவிநாசி கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில், மேற்பார்வை பொறியாளர் முன்னிலையில், நாளை (14ம் தேதி) காலை, 11:00 மணியளவில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.