/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.எல்.ஆர்., பெறுவதற்கு இ-சேவை மையம் இருக்கு!
/
எல்.எல்.ஆர்., பெறுவதற்கு இ-சேவை மையம் இருக்கு!
ADDED : மார் 15, 2024 11:51 PM
திருப்பூர்;
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
இ-சேவை மையங்கள் வாயிலாக, வாகனம் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) விண்ணப்பிக்கும் வசதி, கடந்த 13ம் தேதி முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட மக்கள், இந்த வசதியை பயன்படுத்தி, இ-சேவை மையங்களில் பழகுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இதற்கான சேவை கட்டணமாக, 60 ரூபாய் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.,- ஐ, விண்ணப்பதாரர், வழக்கம்போல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மோட்டார் வாகனத்துறை மூலம் பெறும் டிரைவிங் லைசென்ஸ், உரிமம் மாற்றம் உள்ளிட்டவற்றையும், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

