ADDED : அக் 29, 2026 11:02 PM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் காது பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பல்லடம் அரசு மருத்துவமனையில், காது கேட்கும் பரிசோதனை முகாம் இன்று (அக்.,29) நடந்தது. தலைமை மருத்துவர் சுபா தலைமை வகித்தார். மருத்துவர்கள் குணசேகரன் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டார். முன்னதாக, காது கேட்கும் திறன் பரிசோதனை, காது குழாய் மற்றும் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் பங்கேற்ற, 50க்கும் மேற்பட்ட பயனாளிகளில், 20க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு காதொலி சாதனம் வழங்கப்பட்டது.
