ADDED : ஜன 09, 2026 06:05 AM

அ நிறம் | அளவு
அவிநாசி: அவிநாசி நகராட்சி, 18வது வார்டு பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை விழா நடைபெற்றது. அவிநாசிலிங்கம் பாளையம் வீதியில்,
அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியின் கீழ், 27 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை விழா நடைபெற்றது. அ.தி.மு.க. மாநில இளைஞர் அணி இணை செயலாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்று பூமி பூஜை செய்து, கட்டுமான பணியை துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஜெயபால், கவுன்சிலர் ஸ்ரீதேவி, வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
