/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஈஸ்டர் பண்டிகை: இன்று நள்ளிரவு சர்ச்களில் பிரார்த்தனை
/
ஈஸ்டர் பண்டிகை: இன்று நள்ளிரவு சர்ச்களில் பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகை: இன்று நள்ளிரவு சர்ச்களில் பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகை: இன்று நள்ளிரவு சர்ச்களில் பிரார்த்தனை
ADDED : ஏப் 18, 2025 11:43 PM

திருப்பூர்: கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்வின் முக்கிய நாளான புனித வெள்ளி, நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்ப்பு பெற்ற ஈஸ்டர் பெருநாளை கொண்டாடும் வகையில், 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். நேற்று, ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஏசுவின் சிலுவைபாடுகள் தியானிக்கப்பட்டு, ஆராதனைகள் நடத்தப்பட்டன. நாளை, ஏசுவின் உயிர்ப்பை நினைவு கூரும் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்படும்.
அவிநாசி புனித தோமையார் தேவாலய பங்கு குரு மரிய ஜோசப் கூறியதாவது:
கிறிஸ்தவர்களுக்கு குருத்து ஞாயிறு துவங்கி புனித வாரம் துவங்குகிறது. பெரிய வியாழன், பெரிய வெள்ளி மற்றும் உயிர்ப்பு ஞாயிறு ஆகிய மூன்றும், மிக முக்கியமான நாட்கள். ஏசுவின் சிலுவைப்பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியவை தான் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை; விசுவாசத்தின் ஆணிவேர். இவற்றை குறித்து இந்நாட்களில் தியானிப்பர். ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி, அன்பு என்பது செயலில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தினார். இதுதான் பெரிய வியாழன் அன்று, அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளியன்று, ஏசுவின் சிலுவைப்பாடுகள் தியானிக்கப்படும். அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, இன்றும் காலியாக, அவரின் உயிர்ப் பை பறைசாற்றும் வரலாற்று பதிவாக இருந்து கொண்டிருக்கிறது.
பெரிய சனி என்பது ஏசுவின் உயிர்ப்பின் நாள்; அவரது உயிர்ப்பு என்பது, நமக்கான புதிய நம்பிக்கை. தோல்விகளால் துவண்ட மக்கள், தொழில் நஷ்டத்தால் நலிந்தவர்கள் என பல்வேறு காரணங்களால் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்தவர்களுக்கு புதிய நம்பிக்கையை தருவது தான், ஈஸ்டர் பெருவிழா.
இவ்வாறு, அவர் கூறினார்.

