/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிறுதானியம் உண்டால் ஊட்டச்சத்து கிடைக்கும்'
/
'சிறுதானியம் உண்டால் ஊட்டச்சத்து கிடைக்கும்'
ADDED : டிச 20, 2024 04:14 AM
திருப்பூர்; வெள்ளகோவில் வட்டாரத்தில் அமைக்கப்படவுள்ள சோளம் தொகுப்பு செயல்விளக்கத் திடல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில், வெள்ளகோவில் வட்டாரத்தில் சோளம் உற்பத்திக்கான செயல் விளக்கத் திடல் அமைக்கப்படவுள்ளது. இது குறித்து வள்ளியரச்சல் கிராமத்தில், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திட்ட ஆலோசகர் அரசப்பன் செயல்திடல் குறித்து விளக்கினார். உதவி வேளாண் இயக்குநர் சரஸ்வதி, வேளாண் அலுவலர்கள் சுவாதிகா, விஸ்வநாதன், பூங்கொடி உள்ளிட்டோர் பேசினர்.
வெள்ளகோவில் வட்டாரத்தில் 50 எக்டர் பரப்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்விளக்க திடல் அமைக்கப்படவுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் சிறுதானிய உற்பத்தியான, சோளம், கம்பு, ராகி, போன்றவற்றக்கு மானியம் வழங்கப்படுகிறது.
அரிசியை தொடர்ந்து உட்கொள்வதால் உடலுக்கு மாவுசத்து மட்டும் கிடைக்கிறது. இதற்குப் பதிலாக ஊட்டச்சத்து வழங்கும் சிறு தானியங்கள் உணவில் சேர்க்க வேண்டும். எனவே, இவ்வகை சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்.
இதில் கூடுதல் மகசூல் பெறும் வழிமுறை; குறுகிய காலத்தில் தானியம் மற்றும் தட்டு உற்பத்தி தரும் ரகம்; அவற்றுக்கான இடுபொருள், விதை நேர்த்தி ஆகியன குறித்தும் இம்முகாமில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வள்ளியரச்சல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.