/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை பள்ளிகள் செயல்படும்: கல்வித்துறை அறிவிப்பு
/
நாளை பள்ளிகள் செயல்படும்: கல்வித்துறை அறிவிப்பு
ADDED : ஜன 04, 2024 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:'நாளை (6ம் தேதி) அனைத்து பள்ளிகளும் செயல்படும்,' என, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, மெட்ரிக் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நாளை (6 ம் தேதி) செயல்படும். முழு வேலை நாளாக அன்றைய தினம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.