/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகிழ்ச்சியான மனநிலையில் கல்வி 'தி ேஹாம் ஸ்கூல்'-ன் தாரக மந்திரம்
/
மகிழ்ச்சியான மனநிலையில் கல்வி 'தி ேஹாம் ஸ்கூல்'-ன் தாரக மந்திரம்
மகிழ்ச்சியான மனநிலையில் கல்வி 'தி ேஹாம் ஸ்கூல்'-ன் தாரக மந்திரம்
மகிழ்ச்சியான மனநிலையில் கல்வி 'தி ேஹாம் ஸ்கூல்'-ன் தாரக மந்திரம்
ADDED : அக் 04, 2024 11:46 PM
'குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்,' என்கிறார், திருப்பூர் தி ஹோம் ஸ்கூல் தாளாளர் சக்திதேவி.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
குழந்தைகளுக்கு ஏற்ற சரியான பள்ளியை தேர்வு செய்வதில் தான், பெற்றோரின் திறமை இருக்கிறது. 'பள்ளிக்கு வர மாட்டேன்' என, பிடிவாதம் பிடிக்காமல், ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளே சிறந்தவர்கள். அத்தகைய மனநிலையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகள் எதையும் படித்து தெரிந்துக் கொள்வதில்லை. பார்த்து, கேட்டு, செய்து தெரிந்து கொள்கின்றனர். 'அதை செய்யாதே, இதை செய்யாதே, அப்படி தான் செய்ய வேண்டும்' என விதிமுறைகளை புகுத்தி, சொல்லி கொடுக்கும் எந்தவொரு செயலும், மாணவர்களுக்கு பயன்தராது.
குழந்தைகளை தலைமைப்பண்பு மிக்கவர்களாக, ஒரு சிறந்த தலைவனாக, நல்ல குடிமகனாக உருவாக்க வேண்டும் என்றால், குழந்தைகளை ஏழு வயது வரை, தன்னிச்சையாக அவர்கள் போக்கில், கட்டுப்பாடு ஏதும் விதிக்காமல் மகிழ்ச்சியான சூழலில் வளர விட வேண்டும்.
குழந்தை பருவம் இனிமையானதாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைகள் சுயமாக முடிவெடுத்தல், தலைமைப்பண்பு, ஆராய்ச்சி மனப்பான்மை, படைப்பாற்றல், கூட்டு முயற்சி, விட்டுக் கொடுத்தல், அனைவரையும் அரவணைத்து செல்லுதல் போன்ற குணநலன்களு டன் வளர வேண்டும்.
விளையாடுவது வீண் என்ற மனநிலை பெரும்பாலான பெற்றோர் மனதில் உள்ளது. விளையாட்டு பயிற்சி பெறுவதன் வாயிலாக குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்கிறது என்பதை பலரும் உணர்வதில்லை.தி ஹோம் ஸ்கூல், திருப்பூரில் உள்ள முழுமையான கேம்பிரிட்ஜ் பள்ளி. இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல், ஏ.எஸ்., மற்றும் ஏ லெவல் வரை வகுப்பு செயல்படுகிறது.
குழந்தைகள் மகிழ்ச்சியான மனநிலையுடன் கல்வி கற்கின்றனர். மாணவர்களின் தன்னம்பிக்கை ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் உலகளவில் சிறந்த பல்கலை-யில் படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
தன்னம்பிக்கையுடன் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து கால் பதிக்க தயாராகிவிட்டனர். அட்மிஷன் விவரங்களுக்கு: 75300 - 99085.
இவ்வாறு, அவர் கூறினார்.