/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா
/
சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா
ADDED : ஜூன் 01, 2025 06:42 AM

திருப்பூர் : என்.எம்.சி.டி., அறக்கட்டளை சார்பில், 18வது ஆண்டு கல்வி உதவி வழங்கும், 'ரோஜாக்கூட்டம் விழா' நேற்று திருப்பூர், சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகப் பை, நோட்டுப் புத்தகம் மற்றும் 20 மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவி தொகை வழங்கப்பட்டது.
விழாவில், மெஜஸ்டிக் கந்தசாமி தலைமை தாங்கினார். என்.எம்.சி.டி., இயக்குநர் சங்கரநாராயணன் வரவேற்றார். மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, என்.எம்.சி.டி., திட்டத்தில் வெள்ளிரவெளியில் கட்டியுள்ள புதிய ஆலோசனை மையக் கட்டட அடிக்கல்லை திறந்து வைத்தார்.
துணை மேயர் பாலசுப்ரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி, முன்னாள் லயன்ஸ் கவர்னர் ஜெயசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு, உயர் கல்வி கட்டணம் மற்றும் கல்வி உதவி பொருட்களை வழங்கினர்.
அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆறு அரசு பள்ளிகளுக்கு யோகா, இசை மற்றும் அறிவியல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. துளசிமணி நன்றி கூறினார்.