/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாரணர் இயக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும் ;கல்வியாளர்கள் வலியுறுத்தல்
/
சாரணர் இயக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும் ;கல்வியாளர்கள் வலியுறுத்தல்
சாரணர் இயக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும் ;கல்வியாளர்கள் வலியுறுத்தல்
சாரணர் இயக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும் ;கல்வியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2024 10:36 PM
உடுமலை:அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், பள்ளிகளில் சாரணர் இயக்கத்துக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, நல்லொழுக்கத்தையும், நன்னடத்தைகளையும் கற்பிப்பதில், சாரணர் இயக்கமும் முதன்மையானது. அனைத்து விதமான பள்ளிகளிலும் இவ்வியக்கத்தை செயல்படுத்த அனுமதி உள்ளது.
இருப்பினும் பெரும்பான்மையான அரசுப்பள்ளிகளில், இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்த ஆசிரியர்கள் முன்வருவதில்லை. சாரணர் இயக்கத்தின் வாயிலாக, மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு, தீயணைப்புத்துறையில் வழங்கப்படும் பயிற்சிகள், குடில் அமைப்பது, பேரிடர்களின்போது மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பயனுள்ள பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவிலும், சாரணர் இயக்கம் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை பதினைந்துக்கும் குறைவாகவே உள்ளது. சாரணர் இயக்கத்தில், மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, விருதுகளும் வழங்கப்படுகிறது.
அடுத்தகட்டமாக, இந்த இயக்கத்தில், மாணவர்களின் திறன் அடிப்படையில், மாநில அளவில், ராஜ்யபுரஸ்கார் விருதும், தேசிய அளவில் ராஸ்ட்ரபதி புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.
சாரணர் இயக்கத்திலிருக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர, சிறப்பு மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கிறது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் விருது பெற்றவர்களுக்கென, தனி ஒதுக்கீடும் உள்ளது.
குறிப்பாக, ரயில்வே துறையில், இவ்விரண்டு விருதுகளை பெற்றவர்களுக்கு முதன்மை முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.
அரசிடமிருந்து முறையான நிதியுதவி இல்லாததால் பள்ளிகளில் சாரணர் இயக்கம் முடங்கி விட்டது. மாணவர்களுக்கான நல்லொழுக்க திட்டங்களையும் இயக்கங்களையும் பள்ளிகளில் ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும்.
மாணவர்களின் முழுமையான திறன்கள் இதுபோன்ற இயக்கங்களின் வாயிலாகத்தான் வெளிப்படும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.