/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரத்தில் கார் மோதி முதியவர் பலி
/
மரத்தில் கார் மோதி முதியவர் பலி
ADDED : நவ 02, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம், 62. இவர் தனது மகன் அருள்பிரகாஷ், 40. பேத்தி சாய் அருணா, 9 ஆகியோருடன் பழநிக்குச் சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அருள்பிரகாஷ் காரை ஓட்டினார்.
குப்பிச்சிபாளையம் ரைஸ் மில் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளிய மரத்தில் மோதியது. இதில், நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருள்பிரகாஷ், சாய் அருணா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.