ADDED : அக் 25, 2024 12:09 AM
அ நிறம் | அளவு
பல்லடம் நகராட்சி, பச்சாபாளையத்தை சேர்ந்தவர் முகேஷ், 56.
கடந்தாண்டு, வாகன விபத்தில் சிக்கி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நேற்று மதியம், முகேஷ், பிளேடால், கழுத்து, வயிறு மற்றும் கால் பகுதியில் தனக்குத்தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில், உயிர் போகாத நிலையில், பிறப்பு உறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
