ADDED : ஜன 04, 2024 12:06 AM
அவிநாசி : அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்து வரும் வில்லி பாரத தொடர் சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
தம்பதியரில் ஒருவருடைய கருத்தை மற்றவர் ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும். ஒரு சில கருத்துகளில் ஏற்றம் - இறக்கம் இருக்கும். இல்லறத்தில் அனுசரித்துச் செல்லுதல் வேண்டும். நான் தான் பெரியவன் என நிற்கக்கூடாது.
சிறு, சிறு குறைகள் இல்லாத குடும்பங்களும், மனிதர்களும் இல்லை. வீட்டில் உள்ள மூத்தோர் சொற்களை அமிர்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வீட்டின் பெரியோர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது.
நம் உடல் எதை ஏற்றுக் கொள்ளுமோ அதனை உண்ண வேண்டும். விருப்பம் இல்லாதவற்றை ஒதுக்கி விட வேண்டும். மனதை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க தெரிய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நம் மீது உள்ள தவறை பிறர் மீது திணிக்க கூடாது. எத்தனை கோடி சொத்துக்கள் இருந்தாலும், நோயற்ற வாழ்வே அளவிட முடியாத செல் வம். இவ்வாறு அவர் பேசினார்.