/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவியர் பங்கேற்பு
/
தேர்தல் விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவியர் பங்கேற்பு
தேர்தல் விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவியர் பங்கேற்பு
தேர்தல் விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவியர் பங்கேற்பு
ADDED : அக் 09, 2024 10:14 PM

உடுமலை : உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
திருப்பூர் மாவட்ட அளவில், 15 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள், தேர்தல் கல்வி குழுவின் சார்பில் நடந்தது.
இதன் அடிப்படையில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவியருக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. 'வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற கருத்தை மையமாகக்கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், போஸ்டர் வடிவமைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
பொறுப்பாசிரியர் விஜயலட்சுமி போட்டிகளை நடத்தினார். உடுமலை தாலுகா துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) சையது ராபியம்மாள் போட்டிகளை பார்வையிட்டார்.
பள்ளி தமிழாசிரியர் சின்னராஜ் போட்டிகளை ஒருங்கிணைத்தார். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.