ADDED : செப் 18, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் செலவின பார்வையாளராக அனுபம் மஜூம்தார் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பதிலாக, பாஸ்கர் பட்டாச்சார்யா புதிய தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் செலவினம் தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளை 74183 62261 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், தாராபுரம் நீர்வளத்துறை விருந்தினர் மாளிகையில் தேர்தல் செலவின பார்வையாளரை நேரில் சந்தித்தும் புகார் தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மனீஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
