ADDED : மார் 20, 2024 11:09 PM
திருப்பூர் : லோக்சபா தேர்தலில், ஒரு வேட்பாளர் அதிகபட்சம், 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பாளரின் தேர்தல் செலவின கணக்குகளை பார்வையிடுவதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அசோக்குமார், நேற்று திருப்பூர் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., ஜெய்பீம், உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் உள்பட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் நடத்தை விதிகளை சிறப்பாக செயல்படுத்தவேண்டும். விதிமீறல்களை கண்டறிந்து தடுப்பதற்காக, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் இயங்கிவருகின்றன. உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்யவேண்டும். தேர்தல் கமிஷனின் விதிமுறைப்படி, வேட்பாளரின் செலவு கணக்குகளை மதிப்பீடு செய்யவேண்டும் என, மேற்பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
