sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேர்தல் திருவிழா துவக்கம்; கண்காணிப்பு தீவிரம் இரு தொகுதிகளில் 4.41 லட்சம் வாக்காளர்கள் தயார்

/

 தேர்தல் திருவிழா துவக்கம்; கண்காணிப்பு தீவிரம் இரு தொகுதிகளில் 4.41 லட்சம் வாக்காளர்கள் தயார்

 தேர்தல் திருவிழா துவக்கம்; கண்காணிப்பு தீவிரம் இரு தொகுதிகளில் 4.41 லட்சம் வாக்காளர்கள் தயார்

 தேர்தல் திருவிழா துவக்கம்; கண்காணிப்பு தீவிரம் இரு தொகுதிகளில் 4.41 லட்சம் வாக்காளர்கள் தயார்


ADDED : மார் 18, 2026 05:43 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், 4.41 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

வீதிமீறல்களை கண்காணிக்க, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், தலா 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 2 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 9 ஆயிரத்து, 103 ஆண்கள்; ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 396 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம், 2 லட்சத்து, 28 ஆயிரத்து, 524 பேர் ஓட்டளிக்க உள்ளனர்.

மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 309 ஆண்கள்; ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 417 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 12 ஆயிரத்து, 742 பேர் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.

இதற்காக, உடுமலை தொகுதியில், 132 மையங்களில், 307 ஓட்டுச்சாவடிகளும், மடத்துக்குளம் தொகுதியில், 118 ஓட்டுப்பதிவு மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், ஓட்டுப்பதிவுக்கு தேவையான, கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுப்பதிவு இயந்திரம், யாருக்கு ஓட்டுப்பதிவு செய்தோம் என வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், 'விவிபேட்' ஆகிய இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு மேற்கொண்டு, தயார் நிலையில் உள்ளது.

தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை, 1800-425-0045 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும், தேர்தல் கமிஷன் மொபைல் ஆப் சி-விஜில் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.

வாக்காளர் பட்டியல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை குறித்த சந்தேகங்களை, 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலுள்ள, 0421-1950 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us