ADDED : ஏப் 07, 2026 05:21 PM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை அருகே, தமிழக- கேரளம் எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில் போலீஸ் தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் (காவல்) ராகுல் ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், தமிழக - கேரளம் எல்லையில் அமைந்துள்ள, ஒன்பதாறு போலீஸ் சோதனைச்சாவடியில், தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதியிலுள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்தார்.
ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
