நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைத்திந்திய இளைஞர் பெருமண்டல திருப்பூர் மாநகர இரண்டாவது மண்டல மாநாடு நடந்தது. மாநிலச் செயலாளர் பாரதி, கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்திய கம்யூ., கட்சியின் மாநகர் மாவட்ட குழு செயலாளர் ரவிச்சந்திரன், மாநகர இரண்டாவது மண்டல குழு செயலாளர் சசிகுமார், துணை செயலாளர் விஜய், இளைஞர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் குமார் ஆகியோர் பேசினர்.
இதில், மாநகர இரண்டாவது மண்டல குழு தலைவராக அசோக்குமார், துணை தலைவராக தேவராஜ், செயலாளராக சேரலாதன், துணை செயலாளராக கார்த்திக், பொருளாளராக பொம்மு ராஜ், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.