ADDED : மார் 16, 2026 07:19 AM

அ நிறம் | அளவு
உடுமலை: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, நகரின் அனைத்து பகுதிகளிலும் பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணிகளை, நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் போட்டோக்களை அகற்றினர்.
தொடர்ந்து, அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியை, நகராட்சி சுகாதாரத்துறையினர் துவக்கியுள்ளனர்.
இதே போல், தேர்தல் கண்காணிப்பு குழு, பறக்கும் படை உள்ளிட்ட அனைத்து சிறப்பு குழுக்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
