ADDED : ஏப் 09, 2026 06:18 AM
திருப்பூர்: திருப்பூரில் நடந்த தேர்தல் பணி ஆய்வு கூட்டத்தில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் பங்கேற்றார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிறப்பு தேர்தல் பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே, தேர்தல் பொது பார்வையாளர்கள் சுதா வர்மா, சரிஹா மோகன், தர்மேந்திர சிங், தினேஷ் ஸ்ரீ வத்சவா, தேர்தல் செலவின பார்வையாளர்கள் மொசுகண்டி கங்கநாதர், சச்சின்குமார் சிங், நிலாய் பங்கர், சுனில் என் ரனோட், சத்ய நாராயணன் தக்கர், தேர்தல் காவல் பார்வையாளர் ராகுல் ஹெக்டே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைத்து அமலாக்க முகமைகளின் அலுவலர்கள், தேர்தல் பணி தொடர்பு அலுவலர்களுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
