ADDED : ஜூலை 14, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'ஜூலை மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உடுமலை ரோடு, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும், 16ம் தேதி, காலை, 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ள இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்,' என தெரிவித்துள்ளார்.