/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதி மீறிய சாய ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு
/
விதி மீறிய சாய ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஜூலை 10, 2025 11:30 PM
திருப்பூர்; திருப்பூரில், மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாத சாய ஆலைகள், பட்டன் ஜிப் டையிங், பிரின்டிங் நிறுவனங்கள் ஆங்காங்கே செயல்படுகின்றன.
விதிமீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர் தலைமையில், ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம், கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில், நேற்று நடந்தது. மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர்கள் பாரதிராஜா, சத்யம், பறக்கும் படை பொறியாளர் லாவண்யா மற்றும் மின்வாரியம், பொதுப்பணித்துறை, போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
'சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுநீரை வெளியேற்றும் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். தொடர்ந்து, அத்தகைய செயலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி, பூலுவப்பட்டி, பொம்மநாயக்கன்பாளையம், எஸ்.ஆர்., நகர், வெங்கமேடு, நெருப்பெரிச்சல், சூசையாபுரம் பகுதிகளில், சாயக்கழிவுநீரை வெளியேற்றிய 9 பிரின்டிங் யூனிட்; பிரிட்ஜ்வே காலனியில், ஒரு பட்டன் ஜிப் டையிங் என, 10 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.