/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
நாளை மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : மே 20, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (21ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து, திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் மின்பகிர்மான வட்டம், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்களுக்கான, குறைகேட்பு கூட்டம், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு, குமார்நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று, மின்நுகர்வோர் தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்,' என்று தெரிவித்துள்ளார்.